India
சோதனை சென்ற இடத்தில் Fridge-ஐ திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர். இவர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அரவது உறவினர் அவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ஜாகீர் அவரின் தொலைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அங்குச் சென்றனர்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தபோது அதில் ஆண் சடலம் ஒன்று இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிறகு அந்த சடலம் குறித்து விசாரணை செய்தபோது, இந்த வீட்டில் வசித்து வந்த ஜாகீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த மர்ம மரணம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜூக்குள் ஆண் சடலம் ஒன்றை போலிஸார் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!