India
"GST உயர்ந்து விட்டதால் பா.ஜ.க-வினர் இனி சாப்பிடாமல் இருப்பார்களா?" - காட்டமாக விமர்சித்த மம்தா பானர்ஜி!
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.
தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதும் எதிர்க்கட்சிகள் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பா.ஜ.க ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் அரசை தகர்க்க முயற்சி செய்கிறது. இது அவர்களுடைய வேலையாகவே போய்விட்டது. மேற்கு வங்கத்திலும் அவர்கள் நம்மை தோற்கடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் வெற்றி பெற இயலவில்லை.
பொரிக்கு ஜி.எஸ்.டி வந்துவிட்டது என்பதால் பா.ஜ.க-வினர் இனி சாப்பிடாமல் இருக்கப் போகிறார்களா? இனிப்புகள், தயிர்மீதும் கூட ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் என்னதான் சாப்பிடுவார்கள்? நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் கூட ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது'' எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!