India

காலையில் திருமணம்.. மாலையில் வரவேற்பு நிகழ்வில் மணமகனுக்கு மாரடைப்பு: உறவினர்கள் கண்ணெதிரே நடந்த சோகம்!

கர்நாடகா மாநிலம், விஜயநகர மாவட்டத்திற்குட்பட்ட பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்வாமி. வாலிபரான இவருக்கு அதேகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தேதியில் இவருவாருக்கும் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதியினர் மேடையில் உற்சாகமாக உறவினர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வாழ்த்துகளை பெற்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மகன் ஸ்வாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து அருகே இருந்த உறவினர்களுடன் கூறியுள்ளார். சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த அவர்கள் அவருக்குச் சோடா குடிக்கக் கொடுத்துள்ளனர்.

அதைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வாமி மேடையிலேயே மயங்கிய விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்,

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோவை ஈஷா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை.. போலிஸ் தீவிர விசாரணை!