India
4 வயது மகனை கொன்ற கொடூர தாய்.. பல வருடங்களுக்கு முன்பு செய்த கொலையையும் ஒப்புக்கொண்ட அதிர்ச்சி !
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பபிதா (45). இவருக்கும் பஞ்சாபை சேர்ந்த ஷாம் லால் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தையடுத்து, பஞ்சாபில் குடியேறிய இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சம்பவத்தன்று, அவரது மகன் காணாமல் போயுள்ளார். வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிய கணவர் மகனை பற்றி கேட்கையில், கடைசியாக வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் போது பார்த்ததாக தெரிவித்திருக்கிறார். சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஷாம்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய காவல் அதிகாரிகள், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது மனைவி பபிதா எதோ ஒரு சாக்குமூட்டையை தலையில் சுமந்து கொண்டு சென்றுள்ளது பதிவாகியிருந்தது. இதையடுத்து பபிதா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் திரும்பியுள்ளது.
பின்னர் அவரை பிடித்து விசாரிக்கையில், தனது மகனை தானே கழுத்தை நெரித்து கொலைசெய்ததாக கூறியுள்ளார். மேலும் சிறுவனின் சடலத்தை ஒரு சாக்குப்பையில் போட்டு கட்டி தலையில் வைத்து தூக்கிக்கொண்டு சென்றதாகவும், பிறகு பக்கத்திலிருந்த குளத்தில் உடலை போட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ந்த காவல்துறையினர், மேலும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது 6 வயது பெண் குழந்தையை தானே கொன்றதாகவும், அதன்பிறகு இரண்டு முறை கற்பமுற்றிந்தபோதும், தனது வயிற்றில் தானே அடித்து கர்ப்பத்தை கலைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணுக்கு மன நிலை சரியில்லாமல் இருப்பதால், அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். தனது குழந்தைகளை தாயே கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!