India
விவாகரத்து ஆன பெண்களே டார்கெட்!- 'நான் அவன் இல்லை' பட பாணியில் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் !
ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் அடப்பா சிவ சங்கர் பாபு. இவர், தான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் திருமண தகவல் மையம் ஒன்றில், பதிவிட்டிருந்திருக்கிறார். மேலும் இதன் மூலமாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை குறி வைத்துள்ளார்.
அதனை நம்பி ஒரு சில பெண்கள், இவரை தொடர்பு கொண்டு பேசுகையில், அவர்களிடம் நேக்காக பேசி காதலிப்பதாக ஏமாற்றி வந்துள்ளார். மேலும் அவர்களை திருமணமும் செய்துள்ளார். திருமணம் முடிந்து சில மாதங்களிலே வெளியூர் செல்வதாக கூறி, வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வேறு இடத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படியாக இதுவரை 11 பெண்களின் வாழ்க்கையில் புகுந்து விளையாடியுள்ளார் சிவசங்கர் பாபு. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சந்தேகம் வர, ஒவ்வொருவராக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரளித்த 11 பெண்களில் 7 பேர், ஐதராபாத்தில் உள்ள கோண்டாபூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். ஒரே பகுதியை சேர்ந்த 7 பெண்களை ஒரு ஆள் ஏமாற்றியுள்ளது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது.
சிவசங்கர் பாபு மீது பாதிக்கப்பட்ட 11 பெண்களும் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன.
மேலும் தங்களை போல் இனி எந்த பெண்ணும் பாதிக்கப்பட வேண்டாம், எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே ஆள், ஒரே ஊரை சேர்ந்த 11 பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் தெலுங்கானா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!