India
இடிந்து விழுந்த 8 அடி சுவர்.. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பரிதாப பலி: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
டெல்லி பதர்பூர் எல்லை அலிபூரில் உள்ள சௌஹான் தரம்கடா அருகே உள்ள பகௌலி கிராமத்தில் உள்ள 8 அடி உயரமான சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
அப்போது சுவர் அருகே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் பேரிடம் மீட்புக்குவினர் அங்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சுவர்களின் ஈடுபாடுகள் சிக்கி இருந்தவர்களை மீட்டபோது 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பழைய சுவர் என்பதால் இடிந்து விழுந்து இருக்கலாம் எனவும் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக இந்த சுவர் இடிந்து விழுந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி உயிரிழந்த 5 பேர் யார் என அடையாளம் கண்டு வருகின்றனர். டெல்லி அலிபூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!