India
12 இடத்தில் கடித்து குதறிய நாய்.. மகன் வளர்த்த நாயால் பரிதாபமாக உயிரிழந்த தாய்!
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் ஆன சுசிலா. இவரது மகன் அமித். இவர் உடற் பயிற்சியாளராக உள்ளார். மேலும் தனது வீட்டில் பிட்புல் மற்றும் லாப்ரடோர் என்ற இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் அமித் காலையில் உடற் பயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார். இதனால் வீட்டில் அவரது தாய் ஆன சுசிலா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது திடீரென வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் நாய் ஆன சுசிலாவை கடித்துக் குதறியுள்ளது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். பின்னர் வெளியே சென்ற அவரது மகன் வந்து பார்த்தபோது சடலமாக தாய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் உடனே தாயை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கழுத்து முதல் வயிறு வரை 12 இடங்களில் நாய் கடித்துள்ளதாக ஆன சுசிலாவின் உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!