India
“போனா வராது.. பொழுதுபோனா கிடைக்காது..” : வெறும் 26 ரூபாயில் விண்ணில் பறக்கலாம் - அசத்தல் அறிவிப்பு !
இந்தாண்டு ஜூலை மாதத்தில் வந்த இரட்டை 07/07 நாளை முன்னிட்டு, வியட்ஜெட் விமான நிறுவனம் பயணிகளுக்கு ஒரு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. அது என்னவென்றால், இந்தியாவில் இருந்து வியட்நாம் நாட்டிற்கும், வியட்நாமில் நாட்டில் இருந்து இந்தியாவுக்கும் பயணிக்கும் பயண கட்டணம் வெறும் ரூ.26-க்கு பயணம் செய்யலாம் என அறிவித்தது. அதிலும் இந்த தள்ளுபடியை 7,77,777 விமான பயணிகளுக்கு வழங்கியுள்ளது.
மேலும் இந்த ஆஃபர் ஒரு வார காலத்திற்கு மட்டுமே உண்டு என்றும் அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை 7 முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை இதற்கு முன்பதிவு செய்யலாம். வியட்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கு இந்த சிறப்பு டிக்கெட்டுகள் செல்லுபடியாகும். இந்த பயணத்திற்கான கால அளவு ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரை ஆகும்.
வியட்ஜெட் விமான நிறுவனத்தின் இணையதளமான www.vietjetair.com என்ற இணையதளம் மூலம் இந்த டிக்கெட்டுக்களுக்கு முன்பதிவு செய்யலாம். இன்றுடன் இறுதி நாள் நிறைவடைகிறது என்பதால், இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!