India
ஈரத்துணிகளை கம்பியில் காயப்போட்ட பெண்.. மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி !
தெலங்கானா மாநிலம், கமரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது (38). இவருக்கு திருமணம் ஆகி, பர்வீன் (32) என்ற மனைவியும், 6 மற்றும் 4 வயதில் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது அங்கிருக்கும் தேவனப்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட, பீடி காலனியில் வசித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல், பர்வீன் தனது துணிகளை துவைத்து காயப்போட முற்பட்டுள்ளார். அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால், உள்ளிருக்கும் ஒரு உலோக கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார்.
அப்போது எதிர்ப்பாரா விதமாக, அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால், பர்வீன் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. துடித்துக்கொண்டிருந்த பர்வீனை காப்பாற்ற அவரது கணவர் அகமது முயற்சி செய்தார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மேலும் அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவர்களது குழந்தைகள் மீதும் மின் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அனைவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Also Read
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!