India
ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துகொண்ட ஜோடி.. CONDITION-ஐ கேட்டால் SHOCKஆகி விடுவீர்கள் - என்ன தெரியுமா ?
தற்போதைய சூழலில் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. பார்த்திபன்-வடிவேலு படத்தில் வரும் 'இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்' என்ற காமெடியை போல முதலில் நல்ல பெண் கிடைக்கவேண்டும் என்பதில் ஆரம்பித்து இறுதியில் பெண் கிடைத்தால் போதும் என்று 90ஸ் கிட்ஸ் நிலைமை இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் விதமாக திருமணம் ஒன்று அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பெண் போட்ட பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த பெண்ணை ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மின்டு என்பவருக்கும் சாந்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண சடங்குகள் முடிந்த நிலையில், மணமகனும், மணமகளும் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட தாளில் எழுதப்பட்டிருந்த இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவை தம்பதிகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதன்பின்னர் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த ஒப்பந்தம் திருமணம் நடைபெறுவதற்கு முன்பே இருவரும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்கள் என்றும், திருமணத்துக்கு பின்னர் இதை பின்பற்றவேண்டும் என்பதற்காக இது போன்ற ஒப்பந்தத்தை முன்னரே செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஞாயிறு காலை உணவை கணவர் செய்ய வேண்டும், வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நேரத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும், பார்ட்டிகளில் நல்ல புகைப்படம் எடுக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்லவேண்டும், தினமும் ஜிம் செல்லவேண்டும், போன்ற ஒப்பந்தங்கள் இருந்தது.
ஆண் தரப்பில், மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும், கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும், மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே அனுமதி போன்ற சில ஒப்பந்தங்களும் அதில் இருந்துள்ளது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!