India
பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க நிர்வாகி.. கடிதம் எழுதி இளம் பெண் தற்கொலை!
கேரளா மாநிலம் பாலக்காடு நடுவட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் சரண்யா ( 30). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில், பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க பொருளாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட சரண்யாவின் உறவினர்கள், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சோதனையிட்டபோது, சரண்யா கைப்பட எழுதிய கடிதத்தை கண்டறிந்தனர். அந்த கடிதத்தில், பா.ஜ.க நிர்வாகியான பிரஜீவ் என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், தன்னை போல பல பெண்களின் வாழ்க்கையையும் அவர் கெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரஜீவை தேடி சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க-வின் மாவட்ட தலைவர் கே.எம்.ஹரிதாஸ், பா.ஜ.கவின் நிர்வாகி என்று பிரஜீவ் சரண்யா குறிப்பிட்டுள்ளது தவறு என்றும், பிரஜீவ் இந்திய இரயில்வேயின் ஊழியர் என்பதால், பா.ஜ.க.வில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்றும், சரண்யா தற்கொலைக்கு தனிப்பட்ட காரணம் தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க நிர்வாகியான பிரஜீவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தனது தற்கொலைக்கு காரணம் பா.ஜ.க நிர்வாகி தான் என்று கடிதம் எழுதி வைத்து பா.ஜ.க பெண் நிர்வாகி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!