India
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் கொலை.. சந்தேகித்த நபரை எரித்துக்கொன்ற ஊர் மக்கள்! பின்னணி என்ன?
அசாம் மாநிலம் நஹோன் மாவட்டம் போர் லாலுங் கிராமத்தில் சபிதா (வயது 35 ) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இரு குழந்தைக்கு தாயான இவரின் கொலை அந்த கிராமத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் 5 இளைஞர்கள் மீது சந்தேக வலை விழுந்தது. அவர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த தகவல் அந்த கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதத் தொடர்ந்து அன்று இரவே பஞ்சாயத்து கூடியுள்ளது. அதில் அந்த 5 இளைஞர்களையும் அழைத்துவந்த கிராமத்தார் அவர்களிடம் கடுமையாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில், ரஞ்சித் போர்டோலோய் (30) என்ற இளைஞர்தான் குற்றவாளி என்று தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை உயிருடன் எரித்து கொல்லுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அந்த இளைஞர் நிர்வாணப்படுத்தப்பட்டு, மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் உடலில் பெட்ரோலை ஊற்றிய ஊர் மக்கள் அவரை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அலறி துடித்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் பஞ்சாயத்து தலைவர்களை தேடி வருகின்றனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!