India
“தியாகப் பெருநாளாம் பக்ரீத் பண்டிகை..” : நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாட்டம் ! (புகைப்படங்கள்)
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவல் அதிகரித்துவருவதன் காரணமாகவும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி, வெகு விமர்சையாக கூட்டுதொழுகை குர்பானி என நடத்தப்படும் திருவிழா, தனி மனித இடைவெளி கடைபிடித்து ஒன்று கூடி தொழுகை நடத்தி கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வழக்கமாக பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் ஒன்று கூடி கூட்டு தொழுகை நடத்தி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, இஸ்லாமிய மக்கள் தங்களது ஐந்து கடமைகளில் ஒன்றான ஏழைகளுக்கு உதவுதல் என்பதை கடைப்பிடித்து ஆடு, மாடுகளின் இறைச்சி, அரிசி ஆகியவற்றை குருபானி கொடுத்து புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடினர்.
மேலும் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மசூதிகளில் தொழுகை நடைபெறாமல் இருந்தது. தற்போது தடை நீக்கத்தின் காரணமாக மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதேபோல், பண்டிகை நெல்லை மேலப்பாளையம் மற்றும் மாவட்ட பகுதியில் வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடப்பட்டது. நெல்லை மேலப்பாளையத்தில் பஜார் திடல், மாநகராட்சி மைதானம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. சின்னா திடலில் நடைபெற்ற தொழுகையில் பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் கலந்து கொண்டு தொழுதார்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!