India
“அது ஜோதிடர்கள் கொடுத்த மோதிரம் அல்ல.. ” : சந்திரபாபு நாயுடு அணிந்திருக்கும் மோதிரம் பற்றி தெரியுமா ?
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு, அங்கிருக்கும் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக விளங்குகிறார். எளிமை தோற்றத்தில் இருக்கும் இவர், அண்மைக்காலமாக தனது இடது கையிலுள்ள ஆள்காட்டி விரலில் மோதிரம் ஒன்று அணிந்து வருகிறார்.
இந்த மோதிரம் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமருவதற்காக ஜோதிடர்கள் கூறிய அறிவுரைப்படி அவர் அணிந்திருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள மதனபள்ளி என்ற பகுதியில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட இவர், தனது மோதிரத்தின் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அதாவது அந்த மோதிரம், ஜோதிடத்தின் அறிவுரைப்படி போட்டதல்ல என்றும், அந்த மோதிரமானது ஒரு ஹெல்த் மானிட்டர் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த மோதிரத்தின் மூலம் தான் எவ்வளவு நேரம் தூங்கினேன், எவ்வளவு தூரம் நடந்தேன், சரியான நேரத்திற்கு சாப்பிட்டேனா? இல்லையா? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும் என்றும், இது தனது உடலில் உள்ள இரத்த அளவு, சர்க்கரை அளவு என அனைத்தையும் கண்காணித்து, தனது வீட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி கொண்டே இருக்கும் என்றார்.
மேலும், இதனை தனது மனைவி கண்காணித்து தனக்கு தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது செல்போன் மூலம் எனக்கு தெரிவிப்பதாக கூறினார். இப்படியான ஒரு தொழில்நுட்பம் வாய்ந்த கருவியை தனது மோதிரமாக அணிந்திருப்பதாக அவர் தெரிவித்தார். மோதிரத்தின் ரகசியத்தை பகிர்ந்துள்ளது தொடர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்