India
ஆட்சியை கவுக்க ரூ.92 லட்சம் செலவு.. கூவத்தூர் பாணியில் புகுந்து விளையாடிய அதிருப்தி MLA-க்கள் !
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்டு 'மகா விகாஸ் அகாடி ' என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த கூட்டணியை விடுத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டார்.
அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஏறத்தாழ 8 நாட்களாக சுமார் 50 ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் கட்டண விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில், "மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் 50 பேர், 70 அறைகளில் 8 நாட்கள் தங்கியிருந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்து செக் அவுட் செய்வதற்கு முன் முழு பில் தொகையையும் செலுத்திவிட்டனர்.
ஜூன் 22 முதல் ஜூன் 29-ம் தேதி வரை ஓட்டலின் பல்வேறு தளங்களில் மொத்தம் 70 அறைகளில் தங்கியிருந்த அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த 8 நாட்களில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கான உணவு கட்டணம் மட்டும் சுமார் ரூ.22 லட்சமாகும்.சுப்பீரியர் மற்றும் டீலக்ஸ் உட்பட இரண்டு வகை அறைகளிலும் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்தனர்.
மொத்த பில் குறித்து ஓட்டல் அதிகாரிகள் முழு விபரங்களை வெளியிடவில்லை எனினும் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ரூ.68 முதல் 70 லட்சம் வரை ஹோட்டல் நிர்வாகத்திடம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தற்போது ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!