India
டீ விலை ரூ.20..அதுக்கு சர்வீஸ் சார்ஜ் ரூ.50-நல்லா இருக்கு உங்க டீலிங்: அதிர்ச்சி கொடுத்த இந்திய ரயில்வே
கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லி -போபால் இடையே இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்த ஒருவர் சோர்வாக இருந்ததால் டீ ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக பில்லை பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருக்கு டீ-யின் விலையாக 20 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் அந்த டீக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் செயலால் அதிர்ச்சி அடைந்த அவர் பில்லை புகைப்படம் எடுத்து சமூக இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். 20 ரூபாய் டீக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வசூல் செய்யப்பட்டது இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பலரும் இந்திய ரயில்வேயை டேக் செய்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து இது தொடர்பாக இந்தியன் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது, அதில், ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணிகளின் டிக்கெட் உடன் சேர்த்து, உணவையும் சேர்த்து பயணிகள் புக் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு புக் செய்த ஒரு ரூபாய் கூட பயணிகளிடம் இருந்து ரயில் பயணத்தில் வசூலிக்கப்படாது. ஆனால் உணவுக்கு புக் செய்யாவிட்டால் சாதாரண டீயாக இருந்தாலும் சரி, முழு உணவாக இருந்தாலும் 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜாக வசூலிக்கப்படும்.
ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் டிக்கெட் புக் செய்யும் போது, அவர்கள் உணவைச் சேர்க்காமல் கடைசி நேரத்தில் ரயிலில் உணவை ஆர்டர் செய்தால் மட்டுமே அவர்களுக்கு சர்வீஸ் சார்ஜாக ரூ.50 வசூலிக்கப்படும்.
அது சாதாரண டீயாக இருந்தாலும் சரி, முழு உணவாக இருந்தாலும் சரி அதே சர்வீஸ் சார்ஜ்தான் வசூலிக்கப்படும் .இது தொடர்பாக ஐஆர்சிடிசி கடந்த 2018ஆம் ஆண்டே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!