India
திருட வந்த இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. Party முடிந்ததும் போலிஸிடம் ஒப்படைத்த குடும்பம்! VIRAL VIDEO
டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள வீட்டில், யாருமில்லாத சமயத்தில் 3 மர்ம நபர்கள் திருட சென்றுள்ளனர். அப்போது திடீரென்று வீட்டில் இருந்த நபர்கள் திருடர்களை கண்டனர். இதனால் 3 திருடர்களும் பதறியடித்து தப்பிக்க முயன்றுபோது, அதில் ஒரு திருடனை மட்டும் பிடித்து விசாரித்தனர். அப்போது அது ஒரு சிறுவன் என்று தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்த போது, கதறி அழுதுகொண்டே தனக்கு இன்று பிறந்தநாள். எனவே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி மன்னிப்புகேட்டுள்ளார். மேலும் தனக்கு சிறுவயதில் இருந்தே தந்தை இல்லை, தனது குடும்பம் மிகுந்த பண நெருக்கடியில் உள்ளது என்று தனது சோகக்கதையை அழுது புலம்பியுள்ளார்.
இதைக்கேட்ட அந்த குடும்பத்தினர், தடாலடியாக ஒரு கேக்கை வரவைத்தனர். சோர் (திருடன்) என்று பெயர் இடம்பெற்றிருந்த அந்த கேக்கை, அந்த திருடன் கையால் வெட்ட வைத்து "Happy Birthday" பாடலையும் பாடி மகிழ்ந்தனர். 'என்ன நடக்கிறது?' என்று அந்த சிறு திருடன் முழித்து முழித்து பார்க்க, உடனே சட்டென்று அருகிலிருந்த நபர் ஒருவர் அவனுக்கு கேக்கை எடுத்தது ஊட்டி விட்டார். இதையடுத்து அந்த திருடனை காவல்துறையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகையில், அது குறித்து தேடினோம்.
அப்போது கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம், தற்போது மீண்டும் சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு குஷ்பூ மட்டூ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!