India
பூலான் தேவி வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது.. 42 ஆண்டுகளாக சாமியார் வேடமிட்டு போலிஸை ஏமாற்றியது எப்படி?
இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானவராக திகழ்ந்தவர் பூலான் தேவி. ஒடுக்கப்பட்ட சமுத்தில் பிறந்த இவர் தனது 15 வயதில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னாளில் ஒரு கொள்ளை கூட்டத்துக்கே தலைவியாகி தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒரு சிலரை சுட்டு கொன்றார்.
இது வடமாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பூலான் தேவி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவர் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அரசியலில் குதித்த இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். பெரும் அரசியல் தலைவராக உருவெடுத்த இவர் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் பூலான் தேவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒருவரை போலிஸார் 42 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 65 வயதான சேதா சிங் மேல் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை என 20 வழக்குகளுக்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது
இவர் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக ஹிந்து மக்களின் வழிபாட்டு தலமான சித்ரகூட் பகுதியில் உள்ள மடத்தில் சாமியாராக இருந்து வந்ததும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இவர் குறித்து தகவல் அளிப்போருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலிஸார் அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!