India
30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்.. 8 மணி நேரத்தில் மீட்ட பேரிடர் குழு!
மத்திய பிரதேச மாநிலம், நாராயண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ். இவரது 5 வயது மகன் திபேந்திரா யாதவ். சிறுவன் அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கிருந்த மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது சிறுவன் 30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது.
உடனே இது குறித்து போலிஸாருக்கும், பேரிடர் மீட்பு குழுவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த பேரிடர் குழுவினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது மழை பெய்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
இருந்த போதும் தொடர் மழைக்கு இடையே மீட்பு பணி நடைபெற்றது. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறுக்கு அறுகே 25 ஆழத்திற்கு வேறு துளையிட்டு அதன் வழியாக பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆய்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் மீட்ட பேரிடர் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளனர்.
Also Read
-
ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி ; உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் : முரசொலி!
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!