India
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்: முழு விபரம் இதோ!
இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். அதேபோல் பா.ஜ.க கூட்டணி சார்பாக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். பின்னர், இருவரும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில்தான் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரும் ஜூலை 5-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் ஜூலை 19-ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வாக்குப்பதிவு நடைபெற்ற ஆக.6-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!