India

பானி பூரி விற்பனைக்குத் தடை.. உணவு பிரியர்கள் அதிர்ச்சி: காரணம் என்ன?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸாக பானி பூரி உள்ளது. எத்தனையோ ஸ்னாக்ஸ் வந்தாலும் இன்னும் பானி பூரிக்கு மவுசு குறையவில்லை. ஆனால் அவ்வப்போது சுகாதார பிரச்சனையில் மட்டும் இந்த பானி பூரி உணவு சிக்கி வருகிறது.

கடந்த ஆண்டு கூட சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் ஒருவர் தனது சிறுநீரை பானி (நீர்) உள்ள பக்கெட்டில் கலக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி, அடிக்கடி சாலையோ பானிபூரி கடைகள் சுகாதார சர்ச்சையில் சிக்கி வருகிறது. இருப்பினும் பானி பூரி பிரியர்கள் தொடர்ந்து பானி பூரியை சுவைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில்,நேபாள மாநிலம், காத்மாண்டுவில் காலரா நோய்கள் பரவலுக்கு வழிவகுத்தாக கூறி பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காத்மண்டு நகராட்சியில் சில நாட்களாக சிலர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இது குறித்து மருத்துவர்கள் குழு விசாரணை செய்ததில், பானி பூரியில் வழங்கப்படும் தண்ணீர் மூலமாகக் காலரா நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து பானி பூரி விற்பனைக்கு காத்மாண்டு நகராட்சி தடை விதித்துள்ளது.

மேலும், காலரா நோய் பரவால் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பானி பூரி தடை விதிக்கப்பட்டுள்ளது உணவு பிரியர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: " சும்மா சும்மா இதை செய்யாதீர்கள் " - ஊர் சுற்றிய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம்!