India
“நகைக்கடையில் கொள்ளை.. உரிமையாளரை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள்” : வடக்கில் தொடரும் அவலம் - CCTV வீடியோ!
பிகாரில் உள்ள ஹஜிபூர் என்னும் இடத்தில் கடந்த ஜூன் 22ஆம் நாள் நகைக்கடை ஒன்றில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டிய அவர்கள், நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது கொள்ளையர்களின் செயலை கடை உரிமையாளர் சுனில் பிரியதர்ஷி கடுமையாக எதிர்த்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் இறுதியாக அவரை சுட்டு கொன்றனர்.
இந்த சம்பவம் பிகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் காவல்துறைக்கு நெருக்கடி எழுந்துள்ளது.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !