India
மோடிக்காக ரூ.14 கோடியில் அமைக்கப்பட்ட சாலைகள்.. ஒரே நாளில் சேதமடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!
கடந்த ஜூன் 20ம் தேதி 12 மணிக்குப் பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அறிவியல் கழகம், பொருளாதார பல்கலைக்கழம், மொம்மகட்டாவில் நடைபெற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுகளை முடித்து விட்டு 4.30 மணிக்கு மைசூருக்கு புறப்பட்டு சென்றார். இவரின் இந்த 4 அரைமணி நேரத்திற்கு மட்டும் ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி சென்ற சாலைகளில், மேடு பள்ளம் இல்லாதவகையில் புதிதாகத் தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.14 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற பணிகளுக்காக ரூ.10 கோடி கோடியும் என ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி, கமிஷனரின் நிதியிலிருந்து பணம் எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமரின் 4 மணி நேர வருகைக்காக மட்டும் ரூ. 24 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரவு நேரம் பெய்த கனமழையால் மோடி வருகைக்காக செப்பனிடப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாரியப்பன்பாளைய ஞானபாரதி பிரதான சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நகரவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். இது குறித்து கூறியுள்ள பெங்களூரு மாநகராட்சி கனமழையால் இந்த சம்பவம் நடந்தது என்றும் சாலையின் முழு நீளமும் சேதமடைந்ததாகக் கூறுவது நியாயமில்லை என்றும் கூறியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!