India
பா.ஜ.க தலைவர் மீது துப்பாக்கிச் சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: உ.பி-யில் பகீர் சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் மீதே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்ட பா.ஜ.க தலைவர் கவுதம் கத்தேரியா. இவர் நேற்று இரவு தனது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக மருந்து கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவரது மார்பில் தோட்ட பாய்ந்த நிலையில் அப்படியே கீழே விழுந்துள்ளார். பிறகு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து கவுதம் கத்தேரியாவை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!