India

“மோடி பிடித்த முதலை..” : பாட புத்தகத்தில் இடம்பெற்ற மோடியின் உளறல் கதைகளால் சர்ச்சை - பின்னணி என்ன?

டிஸ்கவரி சேனலில் வெளியாகி உலக அளவில் புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்ட் தொடரின் நாயகனான பியர் கிரில்ஸுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இவருடன் இந்திய பிரதமர் மோடி கடந்த ஆண்டு உத்தராகண்ட் மாநிலம், ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவிற்கு சாகச பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது அதில் பேசிய பிரதமர் மோடி, தான் 14 வயது சிறுவனாக இருந்த போது உள்ளூரில் இருந்த ஒரு குளத்துக்கு குளிக்கச் சென்று போது, ஒரு முதலைக் குட்டியை பார்த்து அதை தனது வீட்டுக்கு கொண்டு வந்தாக கூறியிருந்தார்.

மேலும், தனது செயல் தவறு என தனது அம்மா உணர்த்தியதாகவும், அதன் பின்னர் அந்த முதலையை மீண்டும் குளத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். மோடியின் இந்த கதை அப்போது இணையத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் மோடியின் இந்த கதையை தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர்.

இந்த நிலையில், மோடியின் இந்த முதலை கதை பாட புத்தகத்தில் இடம்பெற்று பெரும் காமெடியாக மாறியுள்ளது. மெட்ரிக் பாடப்புத்தகத்தின் ஒன்றாம் வகுப்பு பாடத்தில் உள்ள பொது அறிவு புத்தகத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

மேலும், இதில் மோடியின் புகைப்படத்துடன் இந்த பாடம் மாணவர்களுக்கு பாடமாக சொல்லித்தரப்படவுள்ளது. நாட்டின் முக்கிய நிகழ்வுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி வரும் மோடி அரசு ஒன்றுக்கும் ஆகாத இது போன்ற சம்பவங்களை பாட புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: கொரோனாவை தொடர்ந்து வரும் புதிய தொற்று.. 73 பேர் உயிரிழப்பு: உலகநாடுகள் அதிர்ச்சி!