India
கேங் வார் சண்டை.. சாலையிலேயே மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. 20 பேர் கொண்ட கும்பலால் நடந்த பரபரப்பு!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே, ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து பேருந்து நிருத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மாணவனை சக மாணவர்கள் சுமார் 20 பேர் கும்பல் சாலையில் வைத்து சரமாரியாக தாக்கினர்.
அருகிலிருந்தவர்கள் தடுக்க முற்பட்டபோதும் அந்த மாணவனை விடமால் அடித்து துன்புறுத்தினர். இதில் படுகாயமடைந்த 11-ம் வகுப்பு படிக்கும் டேனியல் மாணவன் என்ற, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, மாணவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதோடு அவர்களின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சாலையில் வைத்து பள்ளி மாணவனை தாக்கிய சம்பவம் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!