India

ஷவர்மாவை தொடர்ந்து மோமோஸ் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு - எச்சரிக்கை விடுத்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!

நவீன மயக்கப்பட்ட உலகில், தற்போது உணவும் நவீனமாக்கப்பட்டு தான் வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பாரம்பரிய உணவு ஒரு பக்கம் இருந்தாலும், நூடுல்ஸ், பீட்சா, பர்கர், ஷவர்மா என்று மேற்கத்திய உணவுகளின் மணம் நம் மக்களின் மனதை கவர்ந்து வருகிறது. தற்போது இந்த பட்டியலில் மோமோஸ் என்ற உணவையும் நம் மக்கள் இடம்பெற செய்துள்ளனர்.

நேபாள நாட்டில் உருவான 'MOMO' என்ற உணவு, அதற்கு அண்டை நாடான இந்தியாவில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக டார்ஜிலிங், லடாக், சிக்கிம், அசாம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரபலமாக காணப்பட்ட இந்த உணவு, தற்போது தென் தமிழகத்திலும் வர தொடங்கியுள்ளது.

இந்த மோமோஸ் உணவானது, கொழுக்கட்டை போன்று ஆவியில் வேக வைத்து செய்யப்படும் ஒரு வகை உணவு. சிக்கன், காய்கறி என பலவகை ஸ்டஃப்புகளை கொண்டிருக்கும் இந்த உணவானது, வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி உண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோமோஸை அப்படியே விழுங்கியதால், அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது, "அண்மையில் 50 வயது நபர் ஒருவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். அவரது உடற்கூறாய்வின்போது அவரது மூச்சுக்குழாயில் ஒரு முழு மோமோஸ் சிக்கியிருந்தது. அதனால் மூச்சுத்திணறி அந்த நபர் உயிரிழந்தார். வாயில் வைத்தவுடன் வழுக்கிச் செல்லும் மோமோஸின் தன்மையும், அதன் சிறிய அளவுமே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக் காரணம். அதனால் மோமோஸ் சாப்பிடும்போது அதை நன்றாக மென்று உண்ண வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தனர்.

எது சாப்பிட்டாலும் மென்று சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னது எவ்வளவு நன்மை அளிக்க கூடியது என்று நாம் எப்போது புரிந்து கொள்ள போகிறோமோ.!

Also Read: ‘அனாதை’ என்று திட்டியதால் ஆத்திரம்.. : பப்ஜி விளையாட்டின் போது நண்பனுக்கு கத்திக்குத்து - 4 பேர் கைது!