India

PUBG விளையாட்டில் தோல்வி.. நண்பர்கள் கேலி செய்ததால் 16 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி சிறுவன் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி தினமும் நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினமும் நண்பர்களுடன் சேர்ந்து PUBG விளையாடியுள்ளார்.

அப்போது இந்த விளையாட்டில் சிறுவன் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவரது நண்பர்கள் கோலி செய்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த அச்சிறுவன் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் தந்தை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். PUBG விளையாட்டால் இளைஞர்கள் பலர் தற்கொலை மற்றும் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையடைய செய்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், PUBG விளையாட்டை முழுமையாகத் தடை செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: இறந்த இளம் பெண்ணின் உடலை எரித்த போது தீயில் குதித்த இளைஞர்.. உறவினர்கள் அதிர்ச்சி!