India
அலுவலக WhatsApp குழுவில் பகிர்ந்த ஆபாச வீடியோ .. 24 மணி நேரம் ஆகியும் Delete செய்யாத அதிகாரி!
மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா பகுதியில் கலால் துறை உதவி அதிகாரியாக இருப்பவர் அஹிர்வார். இவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வாட்ஸ் ஆப் குழு வைத்துள்ளனர். இதில், தங்களுக்கான தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அஹிர்வார் இந்த குழுவில் ஆபாச வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ பகிர்ந்து 24 மணி நேரம் ஆகியும் அவர் அதை டெலிட் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் அஹிர்காரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்த சம்பவத்திற்கு அஹிர்வார் மறுப்பு தெரிவித்துள்ளார். "நான் கழிவறைக்குச் சென்றபோது யாரோ எனது தொலைபேசியை எடுத்து அதிலிருந்து வீடியோவை வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்துள்ளனர்" என அஹிர்வார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!