India
செல்ஃபி எடுக்கும்போது கடல் அலையில் சிக்கிய பள்ளி மாணவன்.. நண்பர்கள் கண்முன்னே நடந்த சோகம்!
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தாழங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் நாகாஜன். இவரது மகன் கபிலன்(17). இவர் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். இதையடுத்து இன்று புதுச்சேரி அருகே உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் நண்பர்கள் அனைவரும் கடலில் குளித்தனர்.
ப்போது கபிலனுக்கு நீச்சல் தெரியாத நிலையில், ராட்சத அலை எழும்போது தனது மொபைலில் செல்ஃபி எடுத்துள்ளார். அந்நேரம் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட கபிலன், புதை மணலில் சிக்கிகொண்டான்.
இதனால் அதிர்ச்சியடைந்த கபிலனின் நண்பர்கள் அருகிலிருந்த மீனவர்களின் உதவியோடு, கபிலனை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கபிலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து தவளக்குப்பம் போலிஸார் கபிலனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபி மோகத்தால் பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!