India
குடியரத் தலைவர் தேர்தல்.. தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையம்: முழு விபரம் இதோ!
இந்திய நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக 2017ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்," குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும். ஜூன் 15ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும்.
வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஜூன் 29. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை ஜூலை 2ம் தேதி வரை திரும்பப் பெறலாம். தேர்தல் நடைபெற்றால் ஜூலை 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ம் தேதி பதவியேற்பார்" என தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையோர் மொத்த எண்ணிக்கை 10,86,431 ஆகும். இதில் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு 5,43,231. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியை மாநில வாரியாக, இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாகச் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!