India
கை, கால்களைக் கட்டி.. 5 வயது மகளுக்குக் கொடூர தண்டனை வழங்கிய தாய்: நடந்தது என்ன?
டெல்லியில் உள்ள துக்மீர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சப்னா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சப்பான, வீட்டுப்பாடம் செய்யாத தனது 5 வயது மகளின் கை, கால்களைக் கட்டி மொட்டை மாடியில் உச்சி வெய்யிலில் படுக்கவைத்து தண்டனை கொடுத்துள்ளார்.
பின்னர், வெப்பம் தாக்க முடியாமல் சிறுமி கதறித் துடித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டு கீழே வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பொதுவாகவே சிறுமியின் தாய் முரட்டுக் குணம் கொண்டவர் என்றும் குளிர் காலத்தில் கூட உடைகள் இல்லாமல் குழந்தைகளை நிர்வாணமாக நிற்க வைத்து தண்டனை கொடுத்துள்ளார் என அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சிறுமியின் கை,கால்கள் கட்டப்பட்ட சிலையில் மொட்டை மாடியில் வலியால் துடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து டெல்லி போலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!