India
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த சொகுசு பேருந்து.. உடல் கருகி 7 பேர் பலி: விபத்திற்குக் காரணம் என்ன?
கோவாவிலிருந்து ஹைதராபாத்தை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 35க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டத்திற்குட்பட்ட கமலாபூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து எதிரே வந்த லாரியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து முழுவதும் திடீரென தீ பிடித்துள்ளது. மேலும் பேருந்து சாலையில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதனால் பேருந்திலிருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் தீ காயம் அடைந்தவர்களை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!