India
வாக்கிங் சென்ற கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறிப்பு.. புதுச்சேரியில் பரபரப்பு.. போதை ஆசாமி சிக்கியது எப்படி?
புதுச்சேரியில் நடைபயிற்சி மேற்கொண்ட நிறைமாத கர்ப்பிணியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற ஆந்திராவை சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தர்ம அடி கொடுத்து போலிஸிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி கோவிந்தாலை புதுநகரை சார்ந்த மோகன் என்பரின் உறவினர் அபி (28). நிறைமாத கர்ப்பிணியான இவர் இரவு வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அபி கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதனையடுத்து அவர் கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் சங்கிலியை பறித்து சென்ற நபரை துரத்தி மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து உச்சக்கட்ட மதுபோதையில் இருந்த நபரை ஒதியஞ்சாலை போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அபி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சரடு மற்றும் 1 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றபோது, 1 சவரன் தங்க சங்கிலி மட்டும் பறித்துள்ளான்.
மேலும் பொதுமக்கள் விரட்டியதில் அந்த 1 சவரன் தங்க சங்கலியை அந்த மர்ம நபர் எங்கே தவறவிட்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அந்த நபரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!