India
நரம்பில் செலுத்திக் கொண்ட போதை ஊசியால் நடந்த விபரீதம்.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
பஞ்சாப் மாநிலம், லூதியான பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இளைஞரான இவர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் நரம்பில் போதை ஊசி செலுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் ஃபரித்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் ராஜ்குமாருக்குப் போதைப் பொருட்களைக் கொடுத்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் லூதியான பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான நரம்பில் போதை ஊசி செலுத்தியதால் ராஜ்குமார் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!