India

விலை உயர்வு பற்றி கேள்வி கேட்ட தேசியவாதகாங்கிரஸ் பெண் நிர்வாகி மீது தாக்குதல்; புனேவில் பாஜகவினர் அராஜகம்

ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் நிகழ்சியில் தேசியவாத காங்கிரஸ் பெண் நிர்வாகி மீது பாஜக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு. காவல்துறையில் புகார்.

நேற்று அமித்ஷா தொடர்பான புத்தக வெளியீட்டு விழா புனேவில் நடைபெற்றது. அதில் முக்கிய விருந்தினராக ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்கு வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகிகள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை போலிஸார் வெளியேற்ற முயன்ற போது அந்த பெண்கள் மீது அங்கிருந்த பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி மனு கொடுக்க சென்ற பெண் நிர்வாகி வைசாலியை அனுமதிக்கவில்லை என்றும், அவர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தேசியவாத காங்கிரஸ் புகாரில் கூறியுள்ளது.

Also Read: ஊட்டிக்கு ஹெலிகாப்டர் பயணம் - எச்சரித்த வானிலை ஆய்வு மையம் : பயணத்தை ரத்து செய்த வெங்கையா நாயுடு!