India
“ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை - 13 வயது சிறுவனின் வெறிச்செயல்” - பகீர் சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம், அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் ராகுல். இவரது ஒருவயது மகன் ரீத்து நேற்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது குழந்தை ரீத்துவை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ராகுல்.
பிறகு ரீத்துவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மகன் காணவில்லை என ராகுல், அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதி முழுவதும் தீவிரமாக குழந்தையைத் தேடியுள்ளனர்.
அப்போது, அங்குள்ள பள்ளி மைதானத்தில் குழந்தையின் துணி கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த பள்ளியை முழுவதும் அங்கிருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் குழந்தையின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு ரீத்துவின் உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதேபகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் போலிஸார் சிறுவனைப் பிடித்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
அதில் 13 வயது சிறுவன், கேசவ் ராகுல் வீட்டின் அருகே சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கேசவ் ராகுல் சிறுவனையும் அவரது பெற்றோரையும் வசைபாடியுள்ளார். தனது பெற்றோரைத் திட்டிய கேசவ் ராகுலை பழிவாங்க வேண்டும் என சிறுவன் முடிவு செய்துள்ளார்.
இதனால் கேசவ் ராகுலின் ஒரு வயது குழந்தையைத் தூக்கிச் சென்று பள்ளியிலிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து போலிஸார் சிறுவனைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !