India
“சாப்பிட காசு கேட்ட 6 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை” - மத்திய பிரதேச காவலர் வெறிச்செயல் !
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் தலைமை காவலராக இருப்பவர் ரவி சர்மா. இவர் சில நாட்களுக்கு முன்பு தாட்டியா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது, 6 வயது சிறுவன் அங்கு வந்து அவரிடம் 'தனக்கு பசிக்கிறது காசு இருந்தால் கொடுக்குமாறு' யாசகம் கேட்டுள்ளார்.
இதற்கு போலிஸார் காசு எதுவும் இல்லை என கூறியுள்ளார். இருப்பினும் சிறுவன் தொடர்ந்து காசு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவி சர்மா சிறுவனை சரமாரியாக தாக்கி, கழுத்தை நெரித்துள்ளார். இதில் சிறுவன் மூச்சு விடமுடியாமில் அவதிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை உறுதி செய்து கொண்ட ரவி சர்மா, அப்போது அங்கு யாரும் இல்லாததால் சிறுவன் உடலை அருகே இருந்த புதர்ச்செடிக்குள் வீசி சென்றுள்ளார்.
பிறகு அடுத்த நாள் அப்பகுதிமக்கள் சிறுவனின் உடலை கண்டு போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவனை ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யும் காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து அந்த நபர் யார் என விசாரணை மேற்கொண்டதில், காவலர் பயிற்சிப் பள்ளியின் தலைமை காவலர் ரவி சர்மா என தெரிந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாசகம் கேட்ட 6 வயது சிறுவனை போலிஸார் ஒருவர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!