India
நடுரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் நடந்த கொடூரம் !
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்னின் தந்தை அளித்த புகாரின்படி , 30 வயதான அவரது மகள் மே 4 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி சித்தோர்கர் கோட்டைக்கு வந்துள்ளார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அங்கிருந்த ஒரு கும்பல் சாலையின் மூலையில் வைத்து ஒவ்வொருவராக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதன் பின்பு அந்தப் பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை சித்தோர்கர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்பு பாதிக்கப்பட்ட பெண் சைகைகள் மூலமாக நடந்ததைக் கூறியது, ஹைவான் சி.சி.டி-வியில் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கலுராம் என்கிற ஹக்லா, அனில் என்கிற கலு ஷர்மா, கச்சோரியா என்கிற சேத்தன், பிரஹலாத் சால்வி, தேவ்ராஜ், ஆஷிஷ் சர்மா, ரத்தன்லால் உள்ளிட்ட 7 பேரின் பெயர்களை போலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போலிஸார் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலிஸார் இதுவரை எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேலும் தீவிரமாகக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!