India
’மந்திரவாதியுடன் உறவு கொண்டால் பிரச்னை தீரும்’ ஒடிசாவில் கணவனின் குடும்பத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்ப்பதாகச் சொல்லி திருமணமான பெண்ணை வன்கொடுமை செய்த மந்திரவாதி தப்பியோடிய சம்பவம் ஒடிசாவில் நடந்தேறியிருக்கிறது.
பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் மாமியார், மாமனார் மற்றும் கணவனின் சகோதரன் மீது போலிஸார் புகாரளித்ததன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிறது.
போலிஸாரின் கூற்றுப்படி, “2 வயது மகனுக்கு தாயான அந்த பெண்ணை 79 நாட்களாக தனி அறையில் வைத்து அதே மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.தாரஃப் என்ற மந்திரவாதி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
கடந்த 2017ம் ஆண்டு முதலே பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார் தொடர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். இது தொடர்பாக கணவனிடம் எடுத்துக்கூறியும் அவர் கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்.
இப்படி இருக்கையில், அண்மையில் வேறொரு ஊரில் அந்த கணவன் வியாபாரத்திற்காக சென்ற நிலையில், மாமியார் அப்பெண்ணை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது, உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க வேண்டுமெனில் உங்கள் மருமகள் இங்கே சில நாட்கள் தங்க வேண்டும் என மந்திரவாதி கூற அதற்கு அப்பெண் மறுத்துள்ளார். இருப்பினும் அப்பெண்ணை மாமியார் வற்புறுத்தி மந்திரவாதி வசம் விட்டுச் சென்றிருக்கிறார்.
இப்படியாக 79 நாட்கள் அப்பெண்ணை தன்னுடைய இருப்பிடத்தில் தங்க வைத்த அந்த மந்திரவாதி அப்பெண்ணை வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி மந்திரவாதியின் செல்போன் தான் இருந்த அறையில் இருந்ததை கண்ட அப்பெண் தனது பெற்றோரை அழைத்து நடந்ததை கூறியிருக்கிறார்.
இதனையடுத்து பாலசோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதான்ஷு மிஷ்ராவின் தலைமையில் ஜலேஷ்வர் போலிஸாரால் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அந்த மந்திரவாதி தப்பியோடிவிட்டார். இருப்பினும் அவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. மேலும், இந்த குற்றத்திற்கு பின்னணியாக இருந்த பெண்ணின் கணவன், சகோதரன், மாமனார் மாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!