India
லாவகமாக பைக்கை ஆட்டையப்போட்ட டிப்-டாப் வாலிபன்.. உறைந்துப்போன உணவு ஆர்டர் வாங்கச் சென்ற இளைஞன்!
புதுச்சேரியில் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருபவர் மோகன பிரியன் (26). இவர் அண்ணா சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளருக்கு உணவு வாங்குவதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அதனை திருமுடி நகர் சாந்தி வீதியில் நிறுத்தி விட்டு உணவு வாங்கி கொண்டு வெளியே வந்தபோது அவரது வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரியக்கடை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில், போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.
அதன்படி, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில், டிப்-டாப்பாக இருந்த இளைஞர் ஒருவர் லாவகமாக பூட்டை உடைத்து மோகனபிரியனின் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற டிப்-டாப் வாலிபரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை வெளியே தெரிய வந்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் வாகனங்கள் களவாடப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!