India
“ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை..” : நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றானது ரமலான் மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய நோன்பு ஆகும். இதனையொட்டி கடந்த 30 நாட்களாக கடும் விரதம் இருந்த இஸ்லமியர்கள் பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று ரமலான் பண்டிகையினை கொண்டாடி வருகின்றார்கள்.
வானில் பிறை தென்பட்டதால் மத்திய கிழக்கு நாடுகளாக சவுதி, கத்தார் போன்ற அரபு நாடுகளில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலை தமிழகத்தின் பிறை தெரிந்ததால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் ஈகை பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக தங்களது வீடுகளில் தொழுகை நடத்தி வந்த இஸ்லாமியர்கள், இந்த ஆண்டு ரமலான் பண்டிகையினையொட்டி, பள்ளிவாசலுக்குச் சென்று காலை முதலே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணியில் இன்று காலை நடந்த சிறப்பு தொழுகையில் வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.
இதேப்போல், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?