India

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை.. வேரோடு சாய்ந்த மரம்.. நூற்றுக்கணக்கான கிளிகள் பலியான சோகம்!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள கனரா வங்கி அருகே ஏராளமான கிளிகள் அங்குள்ள மரத்தில் வசித்து வந்தன.

இந்த நிலையில் நேற்று (மே 01) அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கிளிகள் வசித்து வந்த மரம் வேருடன் சாய்ந்தது.

இதன் காரணமாக மரத்தில் இருந்த கிளிகள் கிளைகளுக்கு இடையே சிக்கி கொண்டது. மேலும் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் ஏராளமான கிளிகள் பலத்த காயமடைந்தன. இதில் நூற்றுக்கணக்கான கிளிகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் உயிரிழந்த கிளிகளை சேகரித்து முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர். பல ஆண்டுகளாக மரத்தில் தஞ்சமடைந்து இருந்த கிளிகள் நேற்று பெய்த மழையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: வெடித்து சிதறிய டயர்; ஒருவர் பலி..11 பேருக்கு படுகாயம்: சிகிச்சை பெறுபவரை பார்க்க சென்றபோது நேர்ந்த கோரம்