India
122 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் அதிகரிப்பு.. மாநிலங்களை எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!
இந்தியாவில் ஏப்ரல் தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட அக்னி வெயில் துவங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபேரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. இது 122 ஆண்டுகளில் இல்லதா வெப்பநிலை பதிவாகும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் , பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ராஜஸ்தான், குஜராத் , மத்தியப் பிரதேசம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மேலும் ராஜஸ்தான், மத்திய பிரதசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துக் காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், வெயில் தாக்கமும் அதிகரித்துள்ளது மக்களை இன்னும் வாட்டி வதைக்கக்குடிய ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!