India
கேட்காமல் சமோசா எடுத்த நபரை அடித்துக் கொலை செய்த டீ கடை உரிமையாளர்.. ம.பி-யில் பயங்கரம்!
மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஹிர்வாஸ். கொத்தனாரான இவர் டீ கடை ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது தட்டில் வைக்கப்பட்டிருந்த சமோசாவை எடுத்துச் சாப்பிட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஹரி சிங் ஹிர்வார் மற்றும் அவரது மகன் சீதாராம் ஆகியோர் அவரை, “ஏன் சமோசாவை கேட்காமல்' எடுத்து சாப்பிட்டாய்?” எனக் கேட்டு கொடூரமாக அடித்துள்ளனர்.
இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, டீ கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் நடந்தபோது வினோத் ஹிர்வாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடை உரிமையாளரிடம் கேட்காமல் சமோசா எடுத்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!