India
படத்தில் எதிரிகளை சுட்டு தள்ளிய ராக்கிபாய்.. தியேட்டரில் இளைஞரை சுட்ட மர்ம நபர்: கர்நாடகாவில் நடந்த பகீர்
உலக அளவில் சினிமா ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்பை பெற்றிருக்கிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப்-2.
விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் கேஜிஎஃப்-2 வெளியான 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதுவரையில் 900 கோடி ரூபாய்க்கு படம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில், கர்நாடகாவின் ஒரு தியேட்டரில் கேஜிஎஃப்-2 படத்தின் திரையிடலின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே படம் முழுவதும் துப்பாக்கிச் சூடும் சண்டை காட்சிகளாகவும் இருக்கும் வேளையில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணெதிரே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.
அதன்படி ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிக்காவுன் என்ற பகுதியில் உள்ள திரையரங்கில்தான் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு முகலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான வசந்த்குமார் சிவபூர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேஜிஎஃப்-2 படம் பார்க்க சென்றிருக்கிறார்.
Also Read: ராக்கி பாயின் பயணம் முடியவில்லை... KGF-3 பற்றி தயாரிப்பாளர் கூறிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!
அப்போது, படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தவறுதலாக முன் இருக்கையில் இருந்தவரின் இருக்கை மீதி வசந்தின் கால் பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வசந்த்குமாரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. வெளியே சென்று திரும்பிய அந்த நபர் தியேட்டர்குள்ளேயே வைத்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் வசந்த்குமாரை சுட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பிற ரசிகர்கள் அவ்விடத்தை விட்டு அலறியடித்து ஓடியிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் துப்பாக்கியால் சுட்ட நபரும் தப்பியோடியிருக்கிறார். இதனையடுத்து உடனடியாக விரைந்த போலிஸார் துப்பாக்கியால் சுடப்பட்ட வசந்த்குமாரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
சிகிச்சை பெற்றுவந்த வசந்த்குமார் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் பொது வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடிய அந்த நபரை தேடும் பணியில் தனிப்படை போலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!