India
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உடலை கிணற்றில் வீசி சென்ற கொடூரம்: ராஜஸ்தானில் பயங்கரம்!
ராஜஸ்தான் மாநிலம், பாசி என்ற பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க குடும்பத்துடன் வந்த சிறுமி ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் சிறுமியை பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். இருப்பினும் சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர் இது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் சிறுமியிடம் கடைசியாகப் பேசியவரைப் பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அந்த நபர் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பிறகு யாருக்கும் தெரியாமல் அருகே இருந்த கிணற்றில் சிறுமியின் உடலை வீசியதாக போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் சிறுமியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!
-
"இன்னும் எத்தனை உயிர்கள்?" - த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி ஆவேச கேள்வி!