India
“திருமணம் நடந்த ஒருவாரத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை” - போலிஸ் விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
ஆந்திர மாநிலம், மாச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண் குமார். இவருக்கு கடந்த 11ம் தேதி தெனாலி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த நாள் புதுமணத் தம்பதிகள் இருவர் மட்டும் குண்டூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென கிரண் குமார் காணாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் காணவில்லை என உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில், கிருஷ்ணா நதியின் அருகே ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பிறகு அங்கு சென்று ஆண் சடலத்தை மீட்டு விசாரணை செய்தபோது, காணாமல்போன கிரண் குமார் என்பது தெரியவந்தது. மேலும் கிரண் குமாருக்கு முதலிரவில் அச்சம் இருந்துள்ளது. இது குறித்து அவர் உறவினர்களிடம் கூறிவந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!