India
பாஜக தலைவர் பிறந்த நாள் விழாவில் பாதுகாப்பில்லாத பந்தல் சரிந்து 10க்கும் மேலான பெண்கள் படுகாயம்!
புதுச்சேரியில் பா.ஜ.க மாநில தலைவர் பிறந்தநாள் விழாவில், பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதனின் பிறந்தநாள் விழா லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜ.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சாமிநாதனின் பிறந்தநாளையொட்டி கூட்டத்தை சேர்ப்பதற்காக, பிறந்தநாள் விழாவுக்கு வருபவர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் தரப்படும் என சாமிநாதனின் ஆதரவாளர்கள் லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் தகவல் பரப்பினர்.
இதனால் விழா நடைபெற்ற இடத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூடினர். அப்போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த விழா பந்தல் திடீரென சரிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பெண்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!