India
“மனைவியை கட்டாயப்படுத்தி வேறொருவருடன் திருமணம் செய்து வைத்த கணவன்” - சந்தேகத்தால் நடந்த ‘பகீர்’ சம்பவம் !
திரிபுரா மாநிலம், கோவாய் மாவட்டத்தில் பெண் ஒருவரை கும்பல் ஒன்று கொடூராமாக தாக்குவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்கு சென்றபோது, பெண் ஒருவர் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
பிறகு போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்ற பிறகு அந்த பெண் சுயநினைவிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அந்த பெண்ணின் கணவர், மனைவிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்து வருகிறது என சந்தேகப்பட்டுள்ளார். இதனால், அவரது கணவன் உட்பட 15 பேர் அந்த பெண்ணை வயல் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர். பிறகு அவருடன் பழகி வந்ததாக கருதப்படும் நபரையும் தூக்கி வந்து இருவருக்கும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள்தான் கணவனுடன் சேர்ந்து இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் அவரது கணவன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!
-
தமிழ்நாட்டு விவசாயிகள் நாக்பூரில் கைது.. நடுவழியில் ரயிலில் இருந்து இறக்கம் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!